ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம்

ஈஸ்டர் தாக்குதல்கள், அந்த நேரத்தில் அரசாங்கத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாகவே ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துக்கு தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி இருவரும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

பாதுகாப்பு சபையின் முக்கியத்துவம்

இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு சபையின்; முக்கியத்துவம் முன்னாள் ஜனாதிபதி; சிறிசேனாவுக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தின் பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆரம்பத்தில் திட்டமிட்டு இருந்தது.

ஆப்கானிஸ்தான் பின்னர் காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தவே அது திட்டமிட்டது, அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் இலங்கையே அவர்களை பொறுத்தவரை பாதுகாப்பற்ற இலக்காக இருந்தது.

எனவேதான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், இலங்கையில் தாக்குதல்களை நடத்தினர் என்று எஸ்பி திசாநாயக்க காணொளி பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

-tw