உள்ளுராட்சி வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,714 ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

வேட்பாளர்களுக்கு பெரிய பிரச்சனை

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஆளும் கட்சியில் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச,

“இந்த வேட்பாளர்களுக்கு பெரிய பிரச்சனை.அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

சில சமயங்களில் அந்த எல்லை நிர்ணயத்தில் இருந்து வேட்பாளர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பிரிவு குறைக்கப்படும் போது உள்ளூராட்சி தேர்தல் முறைமை நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படும்.

அவ்வாறு செய்தால் நாடாளுமன்ற சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்.” என தெரிவித்தார்.

 

 

-ibc