ஜனாதிபதி தேர்தல் குறித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம்

ஜனநாயகத்தை மீறி செயற்பட்டு வரும் அடக்குமுறை அரசாங்கத்தில் சேரக்கூடாது என்றும், பதவிகளை எடுக்கக் கூடாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.

ஏதேனும் ஒருவகையில், இத்தகைய அடக்குமுறை அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது முன்மொழிவுகளை முன்வைப்பதோ மக்களின் பெயரால் செய்யப்படும் மாபெரும் தவறாகும் என்பதனால், அவ்வாறானதொரு முன்னெடுப்பை மேற்கொள்ளாதிருக்கவும், அவ்வாறு செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் செயற்குழு ஏகமனதாக முடிவு செய்தது.

எவ்வாறாயினும், நாட்டிற்கு பயனளிக்கும் முற்போக்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதில் ஒரு கட்சியாக கூடி முடிவுகள் எட்டப்படும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கட்டாயம் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது.

அவரது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில்,ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பரந்த கூட்டணியை உருவாக்க செயற்பட வேண்டும் என்றும், அந்தக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு கட்சியின் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பூரண அதிகாரம் வழங்குவதற்கு செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்தது.

கட்சியின் செயற்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு நபருக்கும் எதிராக கட்சியின் யாப்பின் பிரகாரம் தேவையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு செயற்குழு மூலம் அதிகாரம் வழங்கப்பட்டது.

 

 

-ad