நாட்டுக்கான சரியான பொதுத் தீர்மானங்களை எடுக்கும் போது நிபந்தனையற்ற விதத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதல் நாடு
அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த வேலைத்திட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
இதேவேளை, நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதல் நாடு இலங்கையாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
இந்த மாற்றத்தை இளைஞர்களே கோரினர். ஆகையால் இந்தச் சந்தர்ப்பத்தை கொண்டு உரிய வகையில் இளைஞர்கள் பயனடைவர் என தான் நம்புவதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.
-ib