எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு அனுமதியளிக்கப்படாது என பௌத்த சாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் அண்மையில் பௌத்த மதத்தையும், புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டதாக கூறப்படும் கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், எந்தவொரு மதத்தையும், தரக்குறைவாக பேசுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மத இழிவை அனுமதிப்பதில்லை
புத்தர் ஞானம் பெற்றுக் கொண்டு ஒளியை தேடியவர், யேசு கிறிஸ்துவே அந்த ஒளி எனவும் போதகர் ஜெரோம் தெரிவித்துள்ளார்.
புத்தரும் யேசுவையே தேடியதாக அவர் குறிப்பிட்டார். பௌத்தர்கள் அனைவருக்கும் யேசு கிறிஸ்து தேவை என தெரிவித்திருந்தார்.
இவ்வாறு மதத்தை இழிவுபடுத்த அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் விதுர தெரிவித்துள்ளார்.
-tw