தான் சதித் திட்டங்கள் ஊடாகப் பிரதமர் பதவியை கைப்பற்றப்போவதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது மட்டுமன்றி வேடிக்கையானது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மொட்டுக் கட்சிக்கே கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்கினர். அதன் பிரகாரம் பிரதமர் பதவியை நான் பொறுப்பேற்றேன்.
பிரதமர் பதவி
நாட்டில் ஏற்பட்ட ஒரு சில தவறான நடவடிக்கைகளால் கடந்த வருடம் பிரதமர் பதவியிலிருந்து விலகினேன்.
எனினும், எமது கட்சியின் ஆட்சியே தொடர்கின்றது. எமது கட்சியின் உறுப்பினரே பிரதமராகவும் உள்ளார். மீண்டும் ஒரு தேர்தலில் மக்களின் ஆணையை ஏற்று நான் பிரதமராவேன் எனவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tw