முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு இலங்கை கடும் கண்டனம்

இலங்கையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புக்கள் குறித்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

“உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (18.05.2023) கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்த தினத்தை நினைவுகூரும் வகையில்  அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

போரால் பாதிக்கப்பட்டவர்கள்

அதில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்ட சம்பவங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து, மேலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள், காயமடைந்தார்கள் அல்லது இடம்பெயர்க்கப்பட்டார்கள்.

அர்த்தமற்ற இந்த வன்முறையால் ஏற்பட்ட வேதனையுடன் வாழும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப் பிழைத்தோர் மற்றும் அவர்களது அன்புக்குரியோர் ஆகியோரை நாம் இன்றைய தினம் நினைவில் கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடன் இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், கனேடிய பிரதமரின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

 

 

-tw