பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்யும் பணி பிப்ரவரி முதல் தேதிக்குள் முடிந்துவிடும் என்று தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (PSC) இன்று அறிவித்தது.
பிஎஸ்சி, இந்த அறிவிப்பைச் செய்வதற்குமுன் அழியா மை எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதைத் தேர்தல் ஆணைய (EC) அதிகாரிகள் நாடாளுமன்ற வளாகத்தில் அதை செய்து காண்பித்தார்கள்.
இடது கை சுட்டுவிரல் நுனி நகம்வரை மையில் தோய்க்கப்படுகிறது. விரலை மையில் நனைக்க மறுப்பவர்கள் வாக்களிக்க தகுதி பெற மாட்டார்கள்.
ஒருமுறை பயன்படுத்தினால் 48 மணி நேரத்துக்கு மை அப்படியே இருக்கும். பலமுறை வாக்களிப்பதைத் தடுக்க பிஎஸ்சி முன்வைத்த பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.
மையின் மாதிரிகள் மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதன் முடிவுகள் தேசிய ஃபாட்வா மன்றத்துக்கும் சுகாதார அமைச்சுக்கும் சமர்பிக்கப்படும் என்று பிஎஸ்சி வட்டாரம் ஒன்று தெரிவித்தது.