இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜை நாடு கடத்தப்பட்டார்

கடந்த மாதம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சீன பிரஜை இன்று (ஜூன் 08) பிற்பகல் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இரண்டு போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற  குறித்த சீன பிர்ஜை மே மாத இறுதியில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனையடுத்து, அந்த நபரை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவிட்டார்.

அவர் மே 22 அன்று குடிவரவுத் திணைக்களத்தின் முன் அறிக்கையைப் பதிவு செய்ய அழைக்கப்பட்டார், அதன் பிறகு, மே 29 அன்று, அட்டர்னி ஜெனரல், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு, அந்தச் சீனப் பிரஜை உண்மையில், சீனாவில் தேடப்படும் ஒரு சந்தேக நபராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தடுப்புக்காவலின் போது தன்னை தாக்கி காயப்படுத்தியதாக லீ ஒரு மனுவை தாக்கல் செய்தார், பின்னர் அது தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டது.

மேலும், குறித்த காயங்கள் சுயமாக ஏற்படுத்தியவை என்று சீன பிரஜை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்படத்தக்கது.

 

 

-tw