இலங்கையில் பல்லாண்டு காலமாக தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நிரந்தர தீர்வு
அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிகளுடனும் பேசி புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காண முனைந்தால் அதற்கு நான் முழுமையான ஆதரவு வழங்குவேன்.
தோல்வியில் முடியும் பேச்சு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு தீர்வுக்கான பேச்சை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்தால் அந்தப் பேச்சு தோல்வியில் தான் முடிவடையும்.
தீர்வு என்ற பெயரில் தமிழ் கட்சிகளை இனிமேல் ஏமாற்ற முடியாது. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக உள்ளார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
-tw