மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக மேலும் ஒரு முன்னாள் உயா் நீதிமன்ற நீதியரசா் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் கூடிய அரசியலமைப்பு பேரவையில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த வாரம் அரசியலமைப்பு பேரவை ஒன்று கூடும் திகதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆணைக்குழு

இதற்கு மேலதிகமாக, அந்த ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களில் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக உள்ள சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் மிக விரைவில் நடைபெறும் என அரசியலமைப்பு பேரவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

-jv