காவல்துறையினருடன் சண்டித்தனம் காட்டும் அளவுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துணிவு வந்துள்ளது. இப்படியானவர்களை, கைது செய்து அவர்களுக்கு பிணை வழங்காமல் சிறையில் தான் தொடர்ந்து அடைத்து வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, “நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி எதனையும் சாதிக்கலாம் என்று கஜேந்திரகுமார், சாணக்கியன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றனர்.
சிறையில் அடைக்கப்படுவார்கள்
“இது அவர்களின் அறியாத்தனம் என்றே கூறவேண்டும். இதற்காக அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்கெடுத்தாலும், உணர்ச்சிவசப்பட்டு துள்ளிக்குதிக்காமல் இருக்க வேண்டும்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கி வாசிக்க வேண்டும், அவ்வாறில்லையெனில் சிறையில் தான் அவர்கள் அடைக்கப்படுவார்கள்.
காவல்துறையினருடன் சண்டித்தனம் காட்டும் அளவுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துணிவு வந்துள்ளது.
இப்படியானவர்களை கைது செய்து அவர்களுக்கு பிணை வழங்காமல் சிறையில் தான் தொடர்ந்து அடைத்து வைத்திருக்க வேண்டும்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சண்டித்தனம் நாடாளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி எடுபடாது. முதலில் அவர்கள் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நன்றாக தெளிவடைய வேண்டும்” – என்றார்.
-ib