இந்தியாவுக்கு எதிரான காரியங்களுக்கு இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: ரணில் விக்ரமசிங்கே

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்பட முடா விரும்பியது ஆனால் புறக்கணிக்கப்பட்டது என்று கட்சியின் தலைவர் சையது சாதிக் சையது அப்துல் ரஹ்மான் கூறினார்.

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் தன்னிச்சையாகச் செல்ல முடிவெடுப்பதில் மூடா “அதிக அவசரமாக” இருப்பதாக டிஏபி பிரமுகர் லிம் கிட் சியாங்கின் கூற்றுக்கு முவார் எம்பி இவ்வாறாக பதிலளித்தார்.

பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் ஒத்துழைக்க மூடா விரும்பவில்லை என்ற லிம்மின் கூற்றையும் அவர் ஆதாரமற்றது என்று மறுத்தார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வாருடன் ஒரு “எளிய சந்திப்பு” கோரி கட்சி மூன்று கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக சையத் சாதிக் கூறினார்.

“இருப்பினும், நாங்கள் கைவிடப்பட்டோம் என்பது மட்டுமல்லாமல், பக்காத்தான் ஹராப்பான் இன் செயலாளர் நாயகம் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், கடிதங்களைப் படிக்க நேரமில்லை என்று பதிலளித்தபோது நாங்கள் கேலி செய்யப்பட்டதக்க உணர்ந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

“பிரதமரின் அலுவலகம் முன்னதாக ஒரு தேதிக்கு ஒப்புக்கொண்ட போதிலும், கடைசி நிமிடத்தில் அந்த சந்திப்பு மீண்டும் ரத்து செய்யப்பட்டது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

சையத் சாதிக், அன்வார் மற்றும் அவரது அதிகாரிகளை பல்வேறு வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறினார்.

சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் பிரான்ஸ் அரசு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாங்கள் நடுநிலை நாடு. அதே சமயத்தில், இந்தியாவுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உண்மையை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள். ஆனால், சீன ராணுவ தளம் எதுவும் அங்கு இல்லை. சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது. இனிமேலும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ராணுவ ஒப்பந்தத்தை சீனா விரும்புவதாக நாங்கள் கருதவில்லை.

இலங்கையில் உள்ள அம்பந்தொட்டை துறைமுகம், சீன வர்த்தகர்களுக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் பாதுகாப்பு, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

அம்பந்தொட்டை துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை. இலங்கை தென்பிராந்திய கடற்படை தலைமையகத்தை அம்பந்தொட்டைக்கு மாற்ற போகிறோம். அங்கு ஒரு படைப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, சீனாவின் ‘யுவான் வங்-5’ என்ற அதிநவீன உளவு கப்பலை அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்க இலங்கை அரசு அனுமதி அளித்தது. அந்த கப்பல், இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களை உளவு பார்க்கும் என்ற அச்சத்தால், இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

-mm