சித்தாந்தங்களின் போராக மாறும் இலங்கை தேர்தல்

இலங்கையின் அடுத்த தேர்தல் சித்தாந்தங்களின் போராக இருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சீர்திருத்தங்களை சீர்குலைக்காத, அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் கட்சியாக தமது கட்சி வாக்காளர்களிடம் செல்லும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியின் முன்மொழிவுகள் கிடைத்தவுடன் அவற்றை பரிசீலிக்க கட்சி தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

உள்நாட்டுக் கடன்

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், அது முற்றிலும் இன்றியமையாததாக இருந்தால், சகிப்புத்தன்மையுடன் அதை நிர்வகிக்க முடியும் என்று ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத மறுசீரமைப்புத் திட்டம், ஜூலை முதலாம் திகதியன்று நாடாளுன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

 

-tw