ஐ.எம்.எப் நிபந்தனைகளுக்கு அடிப்பணியும் அரசு

உழைக்கும் மக்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளைச் செலுத்தாமல் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அரசு வெகு விரைவில் கொண்டு வரவுள்ளது.

அத்துடன் ஊழியர்களின் விருப்பப்படி என்று கூறி 16 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கும் முயற்சியும் நடக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று  ஊடகங்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஐ.எம்.எப் நிபந்தனைகளுக்கு அடிபணிந்துள்ள அரசால் இந்நாட்டு உழைக்கும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஊழியர் ஓய்வூதிய நிதியைக் கடன் தேர்வு மூலம் குறைக்கத் தயாராகும் அரசின் தொழிலாளர் அமைச்சர், புதிய சட்டத்தைக் கொண்டு வந்து உழைக்கும் மக்களின் உரிமைகளை வெட்டத் தயாராகி வருகிறார்.

 

 

-ib