ரணிலின் 13க்கு வலுக்கும் எதிர்ப்பு: சர்வகட்சி மாநாட்டை குறிவைத்துள்ள தமிழ் எம்.பிக்கள்

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் எதிராளிகளை கணித்து தனது காய்களை நகர்த்திவரும் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் சர்வகட்சி மாநாட்டிற்க்கான அழைப்பை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுத்திருந்தார்.

இந்திய விஜயத்தின் பின்னணியில் உள்ள வெளிவராத சில விடயங்களை ரணில் வெளிப்படுத்துவாரா? என்ற கேள்வி ஒருபக்கம் இருக்க சில அரசியல் கட்சிகள் ரணிலின் இந்த அழைப்பை புறக்கணித்துள்ளனர்.

இந்த புறக்கணிப்பு ரணிலிற்கு எதிரானதா, அல்லது இந்தியாவின் பார்வையில் இலங்கை நகர்வதை தடுப்பதற்கான எதிர்க்கட்சிகளின் நகர்வுகளா என அரசியல் ரீதியில் பல கேள்விகள் தோன்றுகின்றன.

எனினும் எத்தனை கட்சிகள் எதிர்த்தாலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது சர்வகட்சி மாநாட்டிற்கான நகர்வுகளை ரணில் மேற்கொண்டு வருகிறார்.

இந்த விடயம் ஒருபுறம் இருக்க, தமிழ் அரசியல் தரப்பு பிரதிநிதிகள் அனைவரும் ரணிலின் அழைப்பை ஆதரிக்கும் வகையில் மாநாட்டில் கலந்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்தியா விஜயத்தின் பின்னர் ரணிலின் முதல் அறிவிப்பாக இருந்த சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பானது இந்தியாவின் அழுத்தத்தின் வெளிப்பாடாக கூட இருக்கலாம் என சில அரசியல் தரப்புக்கள் கருத்து வெளியிடுகின்றன.

எது எவ்வாறாயினும் இலங்கை அரசியலில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு ரணில் வழிவகுப்பாரா என்பதே இலங்கை அரசியலில் தற்போது நிலவி வரும் கேள்வியாக காணப்படுகிறது.

 

 

-tw