கனேடிய பிரதமரின் கூற்றினை நிராகரித்த இலங்கை அரசாங்கம்

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்ற கூற்றினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது தனிப்பட்ட ஆதாயங்களை இலக்காகக் கொண்டது எனறும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

இந்த செயல் இன நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல

கனேடிய பிரதமரின் இந்த செயல் இன நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பாரம்பரியத்தை கொண்ட சமூகங்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

 

-jv