அரசாங்கம் தற்போது தேசிய முன்னுரிமைக்கு செவிசாய்க்க வேண்டும்

ஜனாதிபதி நேற்று சர்வ கட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதியின் நேரடி உத்தரவுகளை மாகாண சபைகளில் ஆளுநர்கள் ஊடாக அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், ஜனாதிபதியின் நேரடி உத்தரவுகளை மாகாண சபைகளில் ஆளுநர்கள் ஊடாக எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது தேசிய முன்னுரிமைக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும், இந்நேரத்தில் தேசிய முன்னுரிமை ஒரு தூய மக்கள் ஆணையை வழங்குவதாகும் என்றும், இதன் ஊடாக நாட்டை சிறப்பாக முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொதுஜன சமுர்த்தி தொழிற்ச் சங்கம் மற்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமுர்த்தி வேலைத்திடமானது 17 இலட்சம் குடும்பங்கள் நேரடியாகவும் 40 இலட்சம் குடும்பங்களை வாடிக்கையாளர்களாகவும் கொண்ட இலங்கை சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும்.

இதில் மிகச் சிறந்த அம்சங்களும் சிறிய குறைபாடுகளும் உள்ளதாகவும், சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் எவ்வித விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளும் இன்றி தரவுகளை மையப்படுத்தாத முறைகளின் ஊடாக இந்த அஸ்வெசும தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நிதியுதவியை எப்படியோ 20 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு பொய்யான கணக்கெடுப்பு மூலம் அஸ்வெசும எனும் பெயரில் இது அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

-ad