திட்டமிட்டபடி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் சற்றுமுன் ஆரம்பமானது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.
இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்து பேருந்துகளில் ஏற்றப்பட்ட பகுதியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணியானது, முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடையவுள்ளது.
அங்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இப் போராட்டத்திற்காக வடக்கு கிழக்கு மாவட்டங்களில் இருந்து அலை அலையாக மக்கள் வந்துகொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும். உண்மைகள் வெளிக்கொணரப்படும் வரை தமது குரல்கள் ஓயாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் கூறியுள்ளார்.
இன்றைய கவனயீர்ப்பு பேரணியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.
-ib