இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ளக் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் குறித்து மீளஆராயப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஐந்து இஸ்லாமிய அமைப்புகளிற்கு எதிராக உயிர்த்தஞாயிறு தாக்குதலை தொடர்ந்து விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நீக்கியுள்ளார். இதற்கு கத்தோலிக்க திருச்சபை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தடைநீக்கப்பட்டமை குறித்து மீள்பரிசீலனை

அரசாங்கம் , தடைநீக்கப்பட்டமை குறித்து மீள்பரிசீலனை செய்யுமா என்ற மோர்னிங்கின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தற்போதைக்கு இது குறித்து மீள்பரிசீலனை செய்யும் திட்டம் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்புடன் தொடர்புபட்டவர்களும் இணைந்து தடைகளை நீக்கும் முடிவை எடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் விமர்சனங்கள் உள்ளதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்.

எனினும் இத் தடை நீக்கத்தினை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே வழங்கியுள்ளோம் அரசியல்வாதிகள் எவரும் இதில் தொடர்புபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தடைநீக்கப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகள் மீது உரிய அமைப்புகள் தொடர்ந்தும் கண்காணிப்பை மேற்கொள்ளும்.

தவறுகள் நேரும் பட்சத்தில் தடை மீண்டும் நடைமுறைக்கு வரும்  எனவும்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் கூறினார்.

 

-jv