மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு

அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3,000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.

எனவே, இந்த நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும், இது தொடர்பான கட்சிகளின் யோசனைகள் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

மலையகத்துக்கான முக்கியத்துவமிக்க அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது மக்கள் பிரதிநிதிகளை அரவணைத்துக்கொண்டு, அவர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி செயற்படவே அமைச்சர் ஜீவன் தொண்டமான் எதிர்பார்க்கின்றார். இதற்கான அழைப்பையும் அவர் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் 9 தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-ad