வறட்சியால் சீர்குலையும் சுகாதாரநிலைமை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க மக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வறட்சி தொடர்ந்து எதிர்காலத்திலும் நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. எதிர்காலத்திலும் மாசடைந்த நீரையே அதிகளவில் பயன்படுத்த நேரிடும். இதனால் வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட பல தொற்றும் ,தொற்றா நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகின்றது.

இந்நிலையிலிருந்துப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கொதித்தாரிய நீரை பருக வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் தற்போது நீர் மூலங்கள் அனைத்தும் வற்றிக் கிடப்பதால் அவற்றில் அதிகபடியான நச்சுக் கிருமிகள் காணப்படும்.

எனவே ,அனைவரும் கட்டாயமாக கொதித்தாறிய நீரைப் பருகுவதே சிறந்தது என சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 

-jv