வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 97,490 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியான காலநிலையினால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, திருகோணமலை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வறட்சியான காலநிலை
அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 30,128 ஆகும். வறட்சியான காலநிலையினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகி உள்ளது.
அந்த மாவட்டத்தில் 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-tw