இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ் – வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் இராணுவ முகாமுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (14) காலை குறித்த இராணுவ முகாமிற்கு முன்னாள் இந்த கவயீர்ப்புப் போராட்டம் நிகழ்ந்ததுள்ளது.

காவல்துறையினர் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக இந்த போராட்டம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

பருத்தித்துறை காவல்துறையினர் கஞ்சா கடத்தல்காரர்கள் உடன் தொடர்பு வைத்து சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் இந்தப் போராட்டத்தின் போது முன்வைத்துள்ளனர்.

எங்கள் பாதுகாப்பு இராணுவமே

இராணுவத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், யாழ் மாவட்ட இராணுவ தளபதி அவர்களே தற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4வது சிங்கறெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் இராணுவமே எங்களுக்கு வேண்டும், எங்கள் பாதுகாப்பு இராணுவமே போன்ற வாசகங்களை உடைய பதாதைகளை எந்திய படி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை காணக்கூடியதாகவுள்ளது.

அதிகாரிகளிற்கு கடிதம்

1995 ஆம் ஆண்டு முதலே இந்த முகாம் இந்த இடத்தில் காணப்படுவதாகவும், இந்த முகம் இருப்பதன் காரணமாக கள்ள மணல் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பன நடைபெறாமல் இருந்ததாகவும். இந்த முகம் அங்கிருந்து அகற்றப்பட்டால் மக்கள் சட்டவிரோத நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும் மக்கள் குறிப்பிட்டு உரிய அரச அதிகாரிகளிற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.

 

-ib

 

 

 

-ib