இலங்கையில் வறட்சியால் நீர் விநியோகத்தில் பாதிப்பு

இந்நாட்களில் மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதால், அத்தியாவசிய மற்றும் சுகாதார தேவைகளுக்கு மாத்திரமே நீரை பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நீர்மட்டம் வேகமாக சரிந்து வரும் நிலையில், மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நுகர்வோரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் போது  உயர் பகுதிகளில் உள்ள நீர் பாவனையாளர்களுக்கு குறைந்த அழுத்தத்தில்  நீர் விநியோகம் இடம்பெறலாம் என அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வரட்சியான காலநிலையினால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு வருந்துவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளதுடன், இந்த நேரத்தில் நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோரை கோரியுள்ளது.

இதேவேளை, வாகனங்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு நீர் பாவனையை குறைத்து, அன்றாட நடவடிக்கைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பொது மக்களிடம் கோரியுள்ளது.

 

 

 

-ad