கானா நாடாளுமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை மத்திய வங்கியே காரணம் என கானா நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ஓசி கியே- மென்சா போன்சு தெரிவித்துள்ளார்.

கானா மத்திய வங்கி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்துரைத்த போதே அவர் இலங்கை மத்திய வங்கியை விமர்சித்துள்ளார்.

2022ஆம் நிதியாண்டில் கானாவின் மத்திய வங்கி பாரிய இழப்பை பதிவு செய்தது. இதன் விளைவாக கானாவின் உள்நாட்டு கடன் பரிமாற்றத்தில் 50 சதவீதத்தை துண்டிப்பதற்கு நேர்ந்தது.

கானா நாடாளுமன்றம்

இதனையடுத்து கானா மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலகுமாறு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ஓசி கியே- மென்சா போன்சு,

“கானா மத்திய வங்கி நேரடியாக நாடாளுமன்றத்துடன் தொடர்புடையது இல்லை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மத்திய வங்கி நிதியமைச்சருக்கு தங்களது நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்க வேண்டும். எனவே, மத்திய வங்கியின் பிரச்சினையை அரசியலாக்குவது நாட்டுக்கு சிறந்ததில்லை.

இலங்கை மத்திய வங்கி

இலங்கையும் இது போன்ற பொருளாதார நெருக்கடி நிலையில் காணப்பட்ட போது இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியவில்லை. இலங்கையில் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது.

எனவே, தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாட்டிற்கு ஆதரவளிப்பதற்கு மத்திய வங்கிக்கு முடியுமாயின் அதற்கு ஆதரவளிக்க வேண்டும்“ என கானா நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ஓசி கியே- மென்சா போன்சு மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

-tw