ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருப்பதால் விசேட வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகள் பெறும் சகாப்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இந்நாட்டில் உள்ள வர்த்தகர்களுக்கு சம நிலையில் போட்டித் தன்மை வாய்ந்த வாய்ப்பை வழங்க வேண்டும் போலவே இந்த முன்னேற்றத்தில் உழைக்கும் மக்களும் பங்குதாரர்கள் ஆக வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஊழல், மோசடி, திருட்டு என்பன ஒழிக்கப்பட்டு, இந்நாட்டை அழித்த ஊழல் கும்பல்களால் கொள்ளையடிக்கப்பட்ட நிதியை நாட்டுக்குத் திருப்பி எடுத்து அந்தத் திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், மக்களுக்காக இழந்த வளங்களை மீளப் பெறுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று கூட்டப்பட்ட குழுவின் இலங்கை வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
பணக்காரர்கள் மட்டுமல்ல, சாமானியர்களும் பங்குச் சந்தையில் ஒரு சிறிய பங்கையேனும் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை தான் கொண்டுள்ளதாகவும், இதன் ஊடாக இளைஞர் சமூகம் பொருளாதாரப் பயணத்தில் அங்கம் வகிப்பதுடன் அது எமது நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
என்றும் இலாபத்தில் ஒரு பகுதி உழைக்கும் மக்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு பணியிடத்தில் தொழில் அமைதி அவசியம் என்றும்,அதை உருவாக்க அரசாங்கம், உரிமையாளர்கள், உழைக்கும் மக்கள் என 3 தரப்புகளும் ஒரே பயணத்தில் செல்ல வேண்டும் என்றும், இது ஒரு தரப்புக்குக் கிடைத்த வெற்றியாகவும், ஒரு தரப்புக்குத் தோல்வியாகவும் இருக்கக் கூடாது என்றும், அனைத்துத் தரப்புகளும் வெற்றி பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதன் வெற்றிக்கு சமூக ஜனநாயகப் பயணம் முக்கியமானது என்றும், மனிதாபிமான முதலாளித்துவத்தின் மூலம் செல்வத்தை உருவாக்கும் தொழில்முனைவோர், தொழில்களுக்கு வணிகங்களுக்கு கொடுக்க முடியுமான அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாகவும், இதற்காக ஏற்ற சட்ட ஒழுங்குமுறைகள் செய்து தரப்பட்டாலும் இவ்வாறு உருவாக்கப்படும் செல்வத்தின் பங்கீட்டில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்றும், செல்வம் உருவாக்கும் முறை மனிதாபிமானமாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக் காட்டினார்.
செல்வந்தர்கள் மட்டுமே பலமாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் தன்னிடம் இல்லை என்றும், இத்தகைய கொள்கைகளைக் கொண்ட நபர்களால் பெரும் பணக்காரர்களுக்கு 600 முதல் 700 பில்லியன் வரை வரிச் சலுகைகள் வழங்கப்பட்டு, நாட்டின் அரசாங்க வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும், இந்த முறை மாற்றப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நாட்டிற்கு மனிதாபிமான முதலாளித்துவம், சமூக சந்தைப் பொருளாதாரம் மற்றும் சமூக ஜனநாயக கட்டமைப்பே தேவை என்றும், இதன் ஊடாக இலங்கையில் தொழில் முயற்சியை ஊக்குவிப்பதுடன் கைத்தொழில் உற்பத்தி செயன்முறையை வலுப்படுத்தி செல்வம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், மட்டுப்படுத்தப்பட்ட அரசாங்கத் தலையீட்டிற்குள் முதலாளித்துவத்தின் குறைபாடுகளைத் தவிர்த்து, இவ்வாறு உருவாக்கப்படும் செல்வம் நியாயமாகவும் மனிதாபிமானமாகவும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்தோட்டத்தில் முதலாளிகள், உரிமையாளர்கள் மற்றும் உழைக்கும் சமூகம் இடையே நல்ல உறவு இருக்க வேண்டும் என்றும், இதில் தொழில் அமைதி நிலவ வேண்டும் என்றும், இதில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில் முயற்சியாண்மையாளர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான சூழல் உருவாகும் என்றும், இதுவரை காலமும் செயற்பட்டு வரும் நட்பு வட்டார முதலாளித்துவத்தின் ஊடாக அவ்வாறானதொரு சம நிலை உருவாகாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
இத்தகைய உரையாடல்களை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் அல்லது தொழிலாளர் நலன் சார் அமைச்சர் நடத்த வேண்டும் என்றாலும், அது தற்போது எதிர்க்கட்சிகளால் நடத்தப்படுவதாகவும், தற்போதைய வங்குரோத்தி நிலையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற உழைக்கும் மக்கள் மற்றும் வணிகர்களுடன் இணைந்து எதிர்க்கட்சி வேலைத் திட்டத்தை தயாரித்துள்ளதுள்ளதாகவும், இதன் ஊடாக உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு மையமாக நாடு மாற்றப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி காலாவதியான கட்டமைப்பிற்குள் செயல்படவில்லை என்றும், மாறாக எதிர்கால தொலைநோக்கு பார்வையும் தொழிலாளர்களுக்கு ஆதரவான மக்கள் சார் பயணம் என்றும், இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும், இதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறும், வர்த்தக உரிமையாளர்களும் தொழிலாளர் சமூகமும் ஒருவரையொருவர் சந்திக்கும் கலந்துரையாடல் அரங்கமாக அடுத்த அமர்வை நடத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
-ad