தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தாத இந்திய, சீனாவின் கப்பல் வருகையை கண்டு அஞ்சுவதாகவும் அவ்வாறான இந்தியாவின் வாலைப்பிடித்துக்கொண்டு கூட்டமைப்பு அடிமைகள் செயற்படுவதாகவும் செ. கஜேந்திரன் எம். பி குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் உரிமைகளை பறிகொடுத்து எதற்காக நாம் இந்தியாவின் பின்னல் செல்லவேண்டும்? இதனை எமது மக்கள் சிந்திக்கவேண்டும்.
எமது மக்களுக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குரல்கொடுக்கின்றார். நியாயமாக செயல்படுகிறார். ஆனால் அவரை ஒரு இனவாதியாக சித்தரிக்கின்றனர்.
ஆனால் பத்திற்கும் மேற்பட்ட ஆசனங்களை கொண்டுள்ள தமிழரசு கட்சியின் தலைவருக்கு இதே சிங்கள பௌத்த பேரினவாம் கொழும்பில் அரச மாளிகையை வழங்கியுள்ளது. அவரை பாதுகாக்கிறது.
இவ்வாறான செயற்பாடு எதற்காக இடம்பெருகிறது என்பதை எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.
கஜேந்திரகுரார் தமிழரின் உரிமையை கோறுவதால் கொழும்பில் இருக்கக்கூடாது என கூறும் பேரினவாத கும்பல், தமிழரின் உரிமையை பலியிடும் சம்பந்தனுக்கு அரச மாளிகையை வழங்கி பாதுகாக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
-tw