இந்து – பௌத்த மக்களுக்கிடையில் மோதலை உருவாக்க சதி

இந்து மற்றும் பௌத்த மக்களுக்கிடையில் மத ரீதியான மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தப்படுவதாக, நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

இரு தரப்பினருக்கிடையிலான மோதலை உருவாக்குவதன் மூலம் இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவை தடுத்து நிறுத்த முடியுமென எதிர்க்கட்சிகள் நினைத்து செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வெவ்வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கும் தரப்பினர் தற்போது மதங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை தூண்டிவிட ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாதம்

கடந்த 2019 ஆம் ஆண்டு, கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து சில முஸ்லிம் குழுக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியிருந்ததை அவர் நினைவூட்டியுள்ளார்.

இந்தப் பின்னணியில், தற்போது இந்து-பௌத்த மக்களுக்கு இடையிலான மோதலை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்தியாவிடமிருந்து கிடைக்கும் ஆதரவை நிறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டும் என பிரசன்ன ரணதுங்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

-fmt