உள்நாட்டு வருமான வரி திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்

உள்நாட்டு வருமான வரி திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வருமான வரி திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்கள் மீதான வியாக்கியானம்

இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் அண்மையில் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன்படி, சாதாரண பெரும்பான்மையுடன் குறித்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியுமென சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தீர்ப்பானது பொருளாதார நிலைத்தன்மை தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

-tw