வரலாற்றை மாற்றி எழுதிய இலங்கை பெண்கள்

வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 20/20 போட்டியில் இலங்கை மகளிர் அணி  வெற்றி பெற்றிருந்தது.

நேற்று நடைபெற்ற மூன்றாவது 20/20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 19 ஓவர்களில் 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பந்துவீச்சில் சமரி அத்தபத்து 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதில் இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இலங்கை மகளிர் துடுப்பாட்ட அணி 17 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை பதிவு செய்தது. இலங்கை அணி சார்பாக சமரி அத்தபத்து 44 ஓட்டங்களைப் பெற்றார்.

 

-jv