இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 ஆவணப்படம்

ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகத்தால் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

முன்னெடுக்கப்பட்டிருந்த விரிவான விசாரணைகள்

குறித்த அறிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அதன் சட்ட நடைமுறைப்படுத்தல் பிரிவினர், பாதுகாப்பு படையினர் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் என்பன விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.

இதன்படி, சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டமை தெரியவந்தது.

 

 

-tw