ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாதுகாப்பு மீளாய்வுக் குழு நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையில் பாதுகாப்பு மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதற்கமைய இந்த மீளாய்வுக் குழுவில் 2030 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான ‘பாதுகாப்பு நிலவர மீளாய்வு 2030’ என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நியதிகளுக்கமைய, சவால்களை எதிர்கொள்வதற்கான மாற்று அணுமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக ‘பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030’ அவசியப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

-jv