கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: ஜெனிவாவில் கனடா சுட்டிக்காட்டு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரி மனிதப் புதைகுழி தொடர்பான விடயத்தை இலங்கை அரசு உரிய முறையில் கையாள வேண்டும் எனக் கனடா வலியுறுத்தியுள்ளது.

புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பத்தகுந்த வகையில் அமைய வேண்டும் எனவும் கனடா கோரியுள்ளது.

ஜெனிவா அமர்வில் சுட்டிக்காட்டு

இலங்கையில் சமாதானம் மற்றும் சுதந்திரத்தைப் பேணுவது குறித்து கனடா, தொடர்ந்தும் கவனம் செலுத்தும் எனவும் ஐக்கிய நாடுகளுக்கான கனேடியப் பிரதிநிதி நேற்று ஜெனிவா அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

-tw