குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முழு அரசியலிலிருந்தும் விலக தயார்: பந்துல குணவர்தன சவால்

புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்திடமிருந்து நான் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக புகையிரத சேவை சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்திக தொடங்கொட என்பவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு”

இவ்வாறு போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் காரியாலயத்தில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசியலில் என்னை போல் (பந்துல குணவர்தன) மிக மோசமான போக்குவரத்து அமைச்சர் எவரும் இல்லை என்றும், நானும் எனது மனைவியும் தம்பதிவ யாத்திரை செல்ல வெளிநாட்டு தரப்பினர் நிதியுதவி வழங்கியதாகவும் புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனது வீட்டுக்கு வந்து 5 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்களின் திணிப்பு என்பதுடன் வன்மையாக இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்.

பின்ணனி

புகையிரத சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் தான் இவர் இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

புகையிரத சாரதிகள் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சு மற்றும் புகையிரத திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புகையிரத சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தேன்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு போக்குவரத்து அமைச்சினால் மாத்திரம் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது.

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் தான் முரண்பட்ட வகையில் தீர்வு காண முடியும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தேன்.

இவ்வாறான நிலையில் தான் புகையிரத சாரதிகள் சங்கத்தினர் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் 84 பேரின் பணிப்புறக்கணிப்பினால் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையவில்லை.

இந்திய கடனுதவி

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னின்று செயற்படுத்திய இந்திக தொடங்கொட எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

 

-ib