தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் பெத் வான் ஷாக் (Beth Van Schaack) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பெத் வான் ஷாக்கின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றைய தினம்(15) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சுமந்திரன் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியூயோர்க்குக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் பக்க சந்திப்பாக அவர் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் பெத் வான் ஷாக்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பிரித்தானிய ஊடகமான சனல்-4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிட்ட ஆவணப்பதிவு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
-tw