இலங்கையின் முதல்தர கிரிக்கெட் வீரர் மீது ஐசிசி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 8 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் சபை ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட வீரர்களில் இலங்கையின் முன்னாள் முதல்தர வீரரான சாலிய சமந்தவும் இடம்பெற்றுள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக் போட்டிகளின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அணியின் இணை உரிமையாளர்கள் கிரிஷன் குமார் சவுத்ரி மற்றும் பராக் சங்கவி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், துடுப்பாட்ட பயிற்சியாளர் அசார் ஜைதி, உதவி பயிற்சியாளர் சன்னி தில்லான் மற்றும் அணியின் மேலாளர் ஷதாப் அகமத் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், அந்நாட்டு உள்ளூர் கிரிக்கெட் வீரர் ரிஸ்வான் ஜாவேத் மற்றும் பங்களாதேஷ் வீரர் நசீர் ஹொசைன் மீதும் ஐசிசி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

 

-tw