தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு நிறைவு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சாரா ஹகெட் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்படி, இது தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழமை வழங்கப்படும் என நீதிபதி சாரா ஹாகெட் தெரிவித்துள்ளார்.
 

-an