நிபா வைரஸைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்துங்கள்

நிபா வைரஸ் இந்தியா, வங்காளதேசம், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை அதிக ஆபத்துள்ள வைரஸ் என அறிவித்துள்ளதாகவும், இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் வரை இருப்பதால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இதனை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.