சீன கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் அலிசப்ரி இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சீனாவின் கப்பல் இலங்கையில் தரித்துநிற்பதற்கு இலங்கை அனுமதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள அலிசப்ரி இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் இலங்கையின் பாதுகாப்பு கரிசனைகள் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா கப்பல் குறித்த இந்தியாவின் கரிசனை
ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி சியான் ஆறு என்ற சீனா கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வரவுள்ளமை மற்றும் இந்தியாவின் கரிசனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோதே அலி சப்ரி மேற்கண்டவாறு கூறினார்.
அதோடு வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கை வருவது குறித்து இலங்கையிடம் நிலையான இயக்க முறை உள்ளது இது குறித்து இந்தியா உட்பட நேசநாடுகளுடன் கலந்தாலோசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சில காலமாக உரையாடலொன்று இடம்பெறுகின்றது இந்தியா நீண்டகாலமாக தனது கரிசனைகளை வெளியிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் நாங்கள் தற்போது வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கை வருவது குறித்து இலங்கையிடம் நிலையான இயக்க முறையொன்றை உருவாக்கியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனை உருவாக்கும்போது இந்தியா உட்பட பல நேசநாடுகளுடன் அது குறித்து ஆராய்ந்தோம் வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கையின் நிலையான இயக்க முறையை பின்பற்றுகின்ற வரை பிரச்சினையில்லை எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
-jv