முள்ளிவாய்க்காலில் தங்கம், ஆயுதங்கள் தேடும் பணி தோல்வியில் நிறைவு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் இருப்பதாகத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கை தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

அகழிவின் போது எந்தவொரு பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வுப் பணிகள் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கம் ஆகியன மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மூன்றாவது நாளாக நேற்று கனரக இயந்திரம் கொண்டு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலகம், கிராம சேவையாளர் தடயவியல் காவல்துறையினர், விஷேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

-tw