வரிகளை அதிகரிக்க முடியாது: ஐ.எம்.எப் க்கு முரணான நிலைப்பாட்டை முன்வைக்கும் ரணில்

நாட்டு மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் வரிகளை அதிகரிக்க முடியதென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற அதிபர் ரணில், நாடு திரும்பிய போது இதனை தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பிய அன்றையதினம் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை அதிபரை சந்தித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன் ஆயத்தமாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் நடத்தியதாக அதிபரிடம் தெரிவித்தனர்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், வரியை மேலும் அதிகரிக்குமாறு கூறுவதாகவும் அவர்கள் அரசின் வருமானம் போதவில்லை என சுட்டிக்காட்டியதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் அதிபரிடம் தெரிவித்தனர்.

அதிபரின் நிலைப்பாடு

இந்தநிலையில், எங்களால் இனியும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்த முடியாது. நாங்கள் அதிகபட்சமாக சுமையை ஏற்றியுள்ளோம். அரசின் வருவாய் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர்களிடம் நாங்கள் அந்த விடயங்களை தெளிவுபடுத்துவோம்.

என்ன செய்தாலும் இனி வரியை உயர்த்த முடியாது என்பது அதிபரின் நிலைப்பாடாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

-tw