யாழில் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிரான பேரணிக்கு அழைப்பு

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதலுக்கு எதிரான கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக எதிர்வரும் 21.10.2023 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஒன்று கூடுமாறு ஜனநாயக முற்போக்கு சக்திகளின் இணைச் செயலாளர் த.ஸ்ரீபிரகாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பான ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”இஸ்ரேலின் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பினால் பலஸ்தீன மக்கள் மேற்கு கரையிலும் காஸாவிலும் சுருக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அரசாங்கத்தினதும் அதன் மேற்குலக கூட்டாளி நாடுகளினதும் அரசியல் பொருளாதார நலன்களுக்காக காசா மக்கள் பலியாக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய மக்களுக்கு எதிரான கொடூர தாக்குதலை கண்டிக்கின்றோம்.

அத்துடன் காசா மீதான ஆக்கிரமிப்பு யுத்தமானது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்டதற்கு ஒப்பானதாக பார்க்கப்பட வேண்டியதே. எனவே ஒடுக்கப்படும் பலஸ்தீன மக்களுக்கு விடுதலை கோரி ஒருமித்து குரல் கொடுப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

-ib