உலக கோப்பை கிரிக்கெட்: முதலாவது வெற்றியை பதிவு செய்த இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

லக்னோவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் ஆட தீர்மானித்தது.

இதன்படி முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 262 புள்ளிகளை பெற்றது. நெதர்லாந்து அணி சார்பில் ஸிப்ராண்ட் ஏங்கெல்ப்ரெக்ட் அதிகபடியாக 70 ஓட்டங்களையும், லோகன் வான் பீக் 59 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ஷன் மதுஷங்க, கசுன் ராஜித   ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதன்படி 263 புள்ளிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் சமரவிக்கரமா அதிகபட்சமாக 91 புள்ளிகளை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன் பதும் நிசாங்க  54 புள்ளிகளையும் சரித்  அசலாங்க 44 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் ஆர்யன் தத்  3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய இந்த உலக கோப்பை தொடரில் இலங்கை அணி தமது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

-an