வரி செலுத்த வேண்டிய மக்களிடம் இருந்து உரிய முறையில் வரியை அறவிடாமல் அரசாங்கம் தொடர்ந்தும் மின் கட்டணத்தை அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை பிரபலப்படுத்துவதற்காக குறிப்பிட்ட சில அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வரி அறவிடாமல் புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை அமைச்சர்கள் ஊடாக பெற்றுள்ளதாகவும் பிரேமதாச கூறுகிறார்.
பொரளை இளைஞர்கள் பௌத்த சங்கத்தின் (YMBA) கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 111 ஆவது இலங்கை நிதான பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-an