இனவாத நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் எவரும் துணைபோகக்கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையைக் கட்டியெழுப்பும் பணியில் அரசியல்வாதிகள் அனைவரும் இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று நடைபெற்ற ‘ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
பல கட்சிகளைக் கொண்ட ஜனநாயகத்தில் தற்போதுள்ள அரசியல் வேறுபாடுகளைப் பேணி புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
-tw