இலங்கையில் சுகாதாரத்துறையில் நிலவிவரும் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு வந்தாலும், 217 மருந்துகளுக்கான பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருகிறது என்று சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் மருந்துகளுக்கு நிலவி வந்த பற்றாக்குறை குறைவடைந்துள்ள போதிலும் இன்னும் சில அத்தியாவசிய மருந்துகளுக்கான பற்றாக்குறை தொடர்ந்து வருகின்றது.
இந்த இடைவெளியை நிவர்த்தி செய்து, எதிர்வரும் மாதங்களில் பற்றாக்குறையை 100க்கு கீழ் குறைப்பதற்கு தேவையான முயற்சிகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
ஆனால், 14 உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு இல்லை எனவும் ரத்நாயக்க இதன் போது உறுதியளித்தார்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் சுமார் 1,300 மருந்துகளில், 383 மருந்துகள் அத்தியாவசியமானவையாக கருதப்படுகிறது என்றும் ,
பற்றாக்குறையில் உள்ள மருந்துகளை விரைவில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
-tw