இலங்கையுடனான சீன எக்சிம் வங்கி மறுசீரமைப்பு முன்மொழிவுகள், மற்ற கடன் வழங்குநர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கோரியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி மூலம் சீனா முன்வைக்கும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தைப் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா காத்திருக்கிறது.
ஒப்பிடக்கூடிய அணுகுமுறை
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் அனைத்து கடனாளர்களிடமும் சமமான, ஒப்பிடக்கூடிய அணுகுமுறை இருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது.
இந்த பிரேரணையின் மூலம் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அதன் பின்னர் கடந்த கால மேக்ரோ-பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, ஊழலுக்கு எதிரான வலுவான கட்டமைப்பு சீர்திருத்தங்களை இலங்கை தொடர்வது முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-tw