டிஜிட்டல் மயமாகும் தபால் நிலையங்கள்

வெளிநாடுகளில் உள்ள தபால் நிலையங்களை போன்று இலங்கையிலுள்ள தபால் நிலையங்களை டிஜிட்டல் மயமாக்கி முன்னோக்கி நகர்த்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

தபால் திணைக்கள வளாகத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இது அரச மற்றும் தனியார் கூட்டுத் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்தோடு, தபால் திணைக்களமானது வருடாந்தம் சுமார் 7000 மில்லியன் நட்டம் வந்த நிலையில் தற்போது தபால் திணைக்களத்தை இலாபகரமான ஒன்றாக மாற்ற முடிந்துள்ளதாகவும் அமைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருட இறுதியில் 7 பில்லியன் நட்டத்தை 4 பில்லியனாக குறைத்து அடுத்த வருடத்திற்குள் தபால் நிலையங்களை நட்டமில்லாத நிலைக்கு கொண்டு வருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

 

 

-tw