இஸ்ரேல்- பாலஸ்தீன போரினால் இலங்கையில் உயரும் எண்ணெய் விலை

இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து வருகின்றது. மத்திய கிழக்கில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதைப் போன்றதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்த போர் இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது.  இது பொதுவாக வர்த்தக முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது.

அதேபோன்று நாம் தொடர்ச்சியாக மத்திய கிழக்குடன் முன்னெடுத்துச் செல்லும் உறவுகள் ஊடாக சில தெரிவுகளைச் செய்ய வேண்டும். ஒரு போதும் இந்த யுத்தம் தொடரக்கூடாது.

எனவே கூடிய சீக்கிரத்தில் சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டு தீர்வுக்குச் செல்ல வேண்டும்.

பாலஸ்தீனர்களுக்கான நாடும், யூதர்களுக்கான நாடும் உருவாக்கப்பட வேண்டும் என 1967ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தத் தீர்வு வரும் வரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பது அனைவரும் புரிந்து கொண்ட உண்மை. அது விரைவில் நடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

-tw